உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால்

விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால்

மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் விருஷபா. இந்த படம் தெலுங்கு மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் தயாராகியுள்ளது. இயக்குனர் நந்தா கிஷோர் இயக்கியுள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. வரும் நவம்பர் 6ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்கிற அறிவிப்பை மோகன்லால் வெளியிட்டுள்ளார்.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்த படத்தை இன்னும் சில நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு தயாரிப்பாக தயாரித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை சிவரஞ்சனி தம்பதியின் மகனான ரோஷன் மேகா ஸ்ரீகாந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ராகினி திவேதி, நேகா சக்சேனா ஆகியோர் நடிக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !