உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த்

இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த்

இமயமலைக்கு நேரம் கிடைக்கும் பொது ஆன்மிக பயணம் மேற்கொள்வார் ரஜினிகாந்த். அந்த வகையில் கடந்த வாரம் இமயமலைக்கு நண்பர்களுடன் புறப்பட்டார். பத்ரிநாத் கோயிலுக்கு சென்றவர், அடுத்த பாபாஜி குகைக்கும் சென்று அங்கே தியானம் சென்றார். சோசியல் மீடியாவில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட அந்த போட்டோக்கள் வைரல் ஆகின.

இந்நிலையில் தனது இமயமலை பயணத்தை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பி உள்ளார். வரும் 25ம் தேதி முதல் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். இமயமலையில் கடும் குளிர், பனிப்பொழிவு இருக்கும் நிலையில் இந்த வயதிலும் ரஜினிகாந்த் ஆர்வமாக அங்கே சென்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாபாஜி குகை அருகே பக்தர்கள் தங்க ரஜினிகாந்த் சின்ன மண்டபமும் கட்டிக் கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !