விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ்
நடிகைகளுக்குத் திருமணம் நடந்துவிட்டால் அதன்பின் கதாநாயகிகளாக நடிக்க வாய்ப்பு தர மாட்டார்கள் என்பதை இன்றைய நடிகைகள் உடைத்தெறிந்து விட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் குழந்தை பெற்ற பிறகும் கூட கதாநாயகிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
சமந்தா, தீபிகா படுகோனே, ஆலியா பட் அப்படியான ஒரு சென்டிமென்ட்டை உடைத்தெறிந்தவர்கள். அந்த வரிசையில் கீர்த்தி சுரேஷும் இணைந்துள்ளார். கடந்த வருடம் தனது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரைத் தருமணம் செய்து கொண்டார்.
கீர்த்தி தற்போது தமிழில் 'ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்து பெயரிடப்படாத தமிழ்ப் படம் ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் உடன் இணைந்து நடித்து வருகிறார்.
திருமணத்திற்குப் பிறகு தெலுங்கில் கீர்த்தி புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ரவி கிரண் கோலா இயக்கும் அப்படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். 'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு இப்படத்தைத் தயாரிக்கிறார். இன்று காலை ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. கிராமியப் பின்னணியில் ஒரு ஆக்ஷன் படமாக இப்படம் உருவாக உள்ளது.