உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம்

பிளாஷ்பேக்: விஜயகாந்த், கமல் இணைந்து நடித்த ஒரே படம்


80களில் தமிழ் சினிமாவை கலக்கிய சகோதரிகள் அம்பிகாவும், ராதாவும். ராதா 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் மூலம் அறிமுகமானார், அம்பிகா 'அந்த 7 நாட்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார். இருவருக்குமே தனித்தனி ரசிகர் கூட்டம் இருந்தது.

இவர்கள் இருவருக்குமே தனிப்பட்ட ஒப்பனை கலைஞராக இருந்தவர் ஜே.மனோகர். இவருக்காக இருவரும் ஒரு படம் நடித்துக் கொடுக்க முன்வந்தார்கள் அந்தப் படம்தான் 'மனக்கணக்கு'. இதனை ஆர்.சி.சக்தி இயக்கினார். அம்பிகா, ராதாவுடன் விஜயகாந்த், ராஜேஷ், சரத்பாபு, செந்தாமரை உள்பட பலர் நடித்தார்கள். கமல் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

திருமணமாகி சந்தோஷமாக வாழும் கணவன், மனைவிக்குள் ஒரு பெண் நுழைந்தால் என்ன ஆகும் என்பதுதான் படத்தின் கதை. படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ராதா, அம்பிகா இருவருமே சொந்த குரலில் பேசி நடித்தார்கள். ஆனால் அது அந்த அளவிற்கு படத்திற்கு உதவவில்லை. அதனால் இந்த படத்திற்கு பிறகு அவர்கள் சொந்த குரலில் பேசவும் இல்லை. விஜயகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து நடித்த படம் என்ற வகையிலும் இந்த படம் முக்கியத்துவம் பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !