உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர்

'டீசல்' படப்பிடிப்பில் ஹரிஷ் கல்யாணை அதிர வைத்த மீனவர்


கடந்த வருடம் 'பார்க்கிங், லப்பர் பந்து' என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த ஹரிஷ் கல்யாண் இந்த வருடம் அதேபோல வெற்றியை ருசிக்க 'டீசல்' படத்தின் மூலம் தயாராகி வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி ரிலீஸ் ஆக அக்டோபர் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. சண்முகம் முருகசாமி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் மீனவர் கதாபாத்திரத்தில் முதன்முறையாக நடித்துள்ளார் ஹரிஷ் கல்யாண். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் கடலிலேயே நடைபெற்றுள்ளது. அதனால் கடல் குறித்த அந்த பயம் போக வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக ஒரு படகில் கடலிலேயே சென்று தங்கியுள்ளனர் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட படக்குழுவினர்.

அப்போது அவர்களுக்கு உதவியாக 70 வயது மீனவர் ஒருவரும் வந்துள்ளார். அந்த சமயத்தில் அவர், தான் மீன் பிடித்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்றை ஹரிஷ் கல்யாணிடம் கூறியுள்ளார். அதாவது ஒரு முறை அந்த மீனவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத புயலால் தாக்கப்பட்டு வங்கதேச எல்லையோரம் ஒதுங்கி இருக்கிறார். ஆனாலும் கிட்டத்தட்ட 48 நாட்கள் குடிக்க குடிநீரின்றி தனது சிறுநீரை குடித்து உயிர் பிழைத்ததாக கூறி ஹரிஷ் கல்யாணை அதிர வைத்துள்ளார். இந்த விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஹரிஷ் கல்யாண்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !