பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன்
ADDED : 16 minutes ago
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்று நாடகத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். 'பைத்தியக்காரன்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அந்த படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீளம் காரணமாக நீக்கப்பட்டது. அதன் பிறகு 'ஆண்டாள், பராசக்தி, பணம், மனோகரா, சொர்க்கவாசல்' படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தார்.
அவர் கதையின் நாயகனாக நடித்த முதல் படம் 'அம்மையப்பன்'. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர் கருணாநிதி. பிற்காலத்தில் 'ப' வரிசை குடும்ப படங்களை இயக்கி குவித்த பீம்சிங்கின் முதல் படம்.
இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரனோடு எஸ்.வரலட்சுமி, ஜி.சகுந்தலா, டி.பாலசுப்பிரமணியம், விகே.ராமசாமி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். நேஷனல் பிக்சர்ஸ் தயாரித்தது. பெரிய கமர்ஷியல் பேக்கேஜோடு படம் வந்தாலும், வெற்றி பெறவில்லை.'