நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்'
ADDED : 7 minutes ago
2014ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வல் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அஞ்சான்'. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அஞ்சான் வெளியான பிறகு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து அது இந்த படத்தின் வெற்றியையும் பாதித்தது. இந்த படத்தின் மூலம் தோல்வி முகத்திற்கு சென்ற லிங்குசாமி இன்னும் வெற்றி பாதைக்கு திரும்பவில்லை.
சமீபகாலமாக லிங்குசாமி ‛அஞ்சான்' படத்தை ரீ-ரிலீஸ் திட்டம் இருப்பதாக தெரிவித்து வந்தார். விமர்சிக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றை நீக்கியும், சிலவற்றை மாற்றியும் இந்த படத்தை மறு வெளியீடு செய்கின்றனர். இந்த இந்த நிலையில் அஞ்சான் படம் நவம்பர் 28ம் தேதியன்று ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.