கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின்
மிஷ்கின் இயக்கிய ‛பிசாசு' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரயாகா மார்ட்டின். தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் கூட மலையாளத்தில் சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக இவரது கைவசம் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதேசமயம் இப்படி படப்பிடிப்பு இல்லாத ஓய்வு நாட்களில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதை ரொம்பவே விரும்புபவர் பிரயாகா மார்ட்டின்.
சமீபத்தில் கென்யாவுக்கு தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் பிரயாகா மார்ட்டின். அங்கே தனது குடும்பத்தினர் மற்றும் அங்கே உள்ள தனது உறவினர்களுடன் சேர்ந்து ஜாலியாக சுற்றிப்பார்த்து பொழுதை போக்கியுள்ளார். ஆனால் அப்படி சுற்றிப் பார்த்தபோது ஒரு இடத்தில் தனது செல்போனை பறி கொடுத்துள்ளார் பிரயாகா மார்ட்டின்.
தனது போன் திருடு போய்விட்டது என்றும் ஐந்து வருடமாக என் நினைவுகளை சுமந்து கொண்டிருந்த என் செல்போன் காணாமல் போனது எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தினாலும் உறவினர்கள் என்னை சமாதானப்படுத்தியதால் அதிலிருந்து ஓரளவு மீண்டு வந்தேன் என்றும் கூறியுள்ளார் பிரயாகா மார்ட்டின்.