காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு...
ADDED : 1 hours ago
தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். திருமணத்திற்கு முன்பு நடித்த அளவுக்கு பிஸியாக இல்லாவிட்டாலும் பிடித்த ரோல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் தமிழில் ‛இந்தியன் 3' படம் உள்ளது. இதுதவிர தெலுங்கில் ஓரிரு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் காஜல் மூக்கில் டியூப், கையில் டிரிப்ஸ் எல்லாம் போட்டபடி ஒரு போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். இதனால் காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், காஜல் டீ-ஏஜிங் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அழகுக்காக பிரபலங்கள் பலர் இதை அவ்வப்போது செய்வது வழக்கமாம். தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால் தன்னை மெருகேற்றிக் கொள்ள அவர் இப்படி சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.