டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு
ADDED : 31 minutes ago
கீது மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் மற்றும் ராமாயணா படங்களில் நடித்து வருகிறார் கன்னட நடிகர் யஷ். இதில் டாக்ஸிக் படப்பிடிப்பு மும்பை மற்றும் பெங்களூரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அவருடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹியூமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் டாக்ஸிக் படத்தில் மேல் சட்டை அணியாமல் யஷ் நடித்த ஒரு காட்சியின் வீடியோ சோசியல் மீடியாவில் கசிந்து படக் குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதன் காரணமாகவே தற்போது டாக்ஸிக் படப்பிடிப்பு நடைபெறும் மும்பை, பெங்களூர் என இரண்டு செட்டுகளிலும் பலத்தை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.