உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ்

பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ்

துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன். அர்ஜுனா விருது பெற்ற கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும் இந்த படத்தில் தன்னுடைய அரசியல் பார்வையை ஒரு புனைவு கதையாக வைத்திருப்பதாகவும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூறுகிறார்.

அக்டோபர் 17ம் தேதியான நாளை திரைக்கு இந்த படத்திற்கு பைசன் என்று ஆங்கிலத்தில் டைட்டில் வைத்தது ஏன்? என்று மாரி செல்வராஜை கேட்டபோது, இந்த படத்தை தமிழகம் கடந்து வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் என்னிடத்தில் கூறினார்கள். அதன் காரணமாகவே காளமாடன் என்று நான் வைத்திருந்த டைட்டிலை பைசன் என்று ஆங்கிலத்தில் மாற்றினேன். என்றாலும் தமிழகத்தை சார்ந்த கபடி விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு கதைக்கு இப்படி ஆங்கிலத்தில் தலைப்பு வைத்ததற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்கிறார் மாரி செல்வராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !