உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு

ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு


'திருமணம்' டிவி சீரியலில் ஹீரோவாக நடித்த சித்து, இப்போது 'தி டார்க் ஹெவன்' என்ற படத்தில் ஹீரோவாகிவிட்டார். பாலாஜி இயக்குகிறார். சென்னையில் நடந்த இந்த பட டீசர் வெளியீட்டு விழாவில் அந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடித்தவரும், இப்போது அவர் மனைவியுமான ஸ்ரேயா அஞ்சனுடன் கலந்துகொண்டார்.

விழாவில் சித்து பேசுகையில், ''இதில் போலீஸ் அதிகாரியாக வருகிறேன். மேக்கரை என்ற காட்டுப்பகுதியில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்தது, பிக்பாஸ் தர்ஷிகா ஹீரோயின். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. பாசிட்டிவ் விஷயங்கள் குறைந்துவிட்டது. நீயும் ஜெயிக்க வேண்டும், நானும் ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்துவிட்டார்கள்.

எனக்கு கடினமாக இருக்கக்கூடிய சூழலில் ராசி பலன்களை பார்ப்பேன். இப்பொழுது வரக்கூடிய ராசி பலன்களை இணையதளத்தில் பார்க்கும் பொழுது மேலும் மன உளைச்சலை அது அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட விஷயங்களை சிலர் ராசிபலனின் சொல்கிறார்கள். என் வெற்றிக்கு என் மனைவி ஸ்ரேயா முக்கியமான காரணம். அதனால்தான், இந்த விழாவி்ல் கூட பட ஹீரோயினுடன் அமராமல், என் மனைவியுடன் இருக்கிறேன். இது கிரைம் திரில்லர் என்பதால் படத்தில் முத்தக் காட்சி எதுவுமே கிடையாது. எனக்கு பயமில்லை' என்றார்.

படக்குழு பேசுகையில், ''இந்த படத்தில் முதலில் வேறொரு ஹீரோ நடித்தார். அவரால் ஏகப்பட்ட பிரச்னை. அவர் போதையை பயன்படுத்தினார். 60 சதவீத உழைப்பினை வீணாக்கினார். கடைசியில் அவரை நீக்கவிட்டு, சித்துவை புக் செய்தோம்'' என்றனர்.

எந்த ஹீரோ என்று கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டனர். அவர் நடிகை ஒருவரின் தம்பி என சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !