‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல்
மான் கராத்தே, கெத்து ஆகிய படங்களை இயக்கிய கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'ரெட்ட தல'. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. கிரிஷ் திருக்குமரன் அளித்த பேட்டியில் ரெட்ட தல படத்தின் கதைக்கரு குறித்து கூறியதாவது, தப்பு செய்யும்போது யார் பார்க்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. யாரோ உங்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அது கடவுளாக, காற்றாக, இயற்கையாகவும் இருக்கலாம்.
நான் ஷேக்ஸ்பியரிடம் இருந்துதான் 'ரெட்ட தல' படத்தின் கதையை வாங்கி இருக்கிறேன். தான் ஆசைப்பட்ட பெண்ணுக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று செயல்படுகிறவன் கடைசியில், அந்தப் பெண் அதற்கு தகுதியானவரா என்று யோசிக்கிறான். அது அவனுக்குள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் ரெட்ட தல படத்தின் கதைக்கரு என கூறியுள்ளார்.