உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த்

ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த்

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி இசையமைப்பாளர் ஆக வலம் வருபவர் தேவிஸ்ரீ பிரசாந்த். குறிப்பாக பான் இந்திய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் வேணு இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா நிறுவனத்தின் தயாரிப்பில் ' எல்லம்மா' எனும் படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க நானி, நிதின், சர்வானந்த் போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது இந்த படத்தில் தேவிஸ்ரீ பிரசாந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !