உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த மாதம் கூட காந்தாரா திரைப்படத்தை கேரளாவில் வெளியிடுவதில் பங்கு சதவீதம் பிரிப்பதில் அந்தப்படத்தை வெளியிட்ட நடிகர் பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனத்துடன் கெடுபிடி காட்டி அதன்பிறகு ஒருவழியாக சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ரசிகா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் மனோஜ் என்பவர் கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் மீது நடவடிகை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் முறையற்ற நடவடிக்கைகளை கடைபிடித்து வருகிறது. 2013 முதல் 2023 வரையிலான தங்களது பண வரவை முறைகேடான முறையில் பயன்படுத்தி இருக்கிறது. இது குறித்து மாவட்ட பதிவாளர் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளதுடன் இதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட கோரிக்கை வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட இரு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இது குறித்து விளக்கம் அளிக்க கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !