உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி

அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி

தீபாவளிக்கு வெளியான படங்களில் அப்பா கேரக்டரில் நடித்த இரண்டு பேருக்கு விமர்சன ரீதியாக பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. அதில் முக்கியமானவர் பைசன் படத்தில் ஹீரோ துருவ் அப்பாவாக நடித்த பசுபதி. படம் பார்த்த அனைவரும் பசுபதியின் கோபம், பாசம், ஆக்ரோசத்தை, அவரின் தனித்துவ நடிப்பை பாராட்டி வருகிறார்கள். அனைத்து விமர்சனங்களிலும் பசுபதிக்கு தனியிடம் கொடுத்து பாராட்டியிருக்கிறார்கள்.

அதேபோல், டியூட் படத்தில் ஹீரோயின் மமிதா பைஜூ அப்பாவாக நடித்த சரத்குமாரை பாராட்டுகிறார்கள். காமெடி மற்றும் வில்லத்தனம் கலந்த அவரின் நடிப்பு பலரால் குறிப்பிடப்படுகிறது. சமீபகாலத்தில் இப்படிப்பட்ட கேரக்டரில் சரத்குமார் நடித்தது இல்லை. மந்திரியாக நடித்த அவர் கேரக்டர் முதலில் காமெடியாக செல்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் சற்றே வில்லத்தனமாக மாறி, கடைசியில் சென்டிமென்ட்டில் முடிகிறது.

இந்த படங்களை தவிர, டீசல் படத்தில் ஹீரோ ஹரிஷ் கல்யாண் அப்பா மாதிரியான கேரக்டரில் நடித்த சாய்குமார் நடிப்புக்கும் பாராட்டுகள் கிடைத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !