உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம்

நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம்

ஹிந்தி, மராத்தி, பெங்காலி படங்களில் நடித்து வந்த ராதிகா ஆப்தே, தமிழில் தோனி படம் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு ‛ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன்', ரஜினியின் ‛கபாலி' போன்ற படங்களில் நடித்தார். தற்போது ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்து வருகிறார்.

ராதிகா ஆப்தே கூறுகையில், ‛‛இந்திய சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்காக மட்டுமே படம் எடுக்கிறார்கள். அவர்களை மட்டுமே கருத்தில் கொண்டு கதை எழுதுகிறார்கள். ஆனால் எங்களைப் போன்ற நடிகைகளை ரொமான்ஸ் செய்வதற்கும், கவர்ச்சி நடனம் ஆடுவதற்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நடிகைகளின் திறமையை இருட்டடிப்பு செய்யும் நிலைப்பாட்டை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

Senthoora, Sydney
2025-10-20 06:48:04

நீங்களும் உங்கள் வாய்ப்புக்காக எதுக்கு போறீங்க. கதையில் மாற்றம் வைத்து எங்களுக்கும் முதல்மை தாருங்க அல்லாவிட்டால் நடிக்க மாட்டோம் என்று சொல்ல தைரியம் இருக்கா. அதை செய்ய மாட்டீங்க அஜெசிமெண்ட்க்கும் ஒத்துக்கொண்டுதானே போறீங்க.


RASIPURAM VIJAYAKUMAR CEO
2025-10-19 06:22:50

உண்மை