உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்!

இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்!


நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் 'அசுரன், விடுதலை 2, வாத்தி' போன்ற படங்களில் நடிகராக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

சமீபத்தில் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கின்றார் என அறிவித்தனர். இந்த படத்தை பார்வாத்தா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இப்போது இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஆக ஜி.வி. பிரகாஷ் இணைந்துள்ளார் என என்று ஜாலியான புரோமோ வீடியோவின் மூலம் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் அடுத்த அப்டேட் அக்டோபர் 23ம் தேதியன்று வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !