உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை

‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை

கலா அல்லூரி இயக்கம், தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‛பரிசு'. இதில் கதையின் நாயகியாக ஜான்விகா நடித்துள்ளார். இவருடன் ஜெய் பாலா, கிரண் பிரதீப், ஆடுகளம் நரேன், மனோபாலா (மறைவுக்கு முன் நடித்தது), சென்ராயன், சச்சு, அஞ்சலிதேவி, சின்ன பொண்ணு ஆகியோரும் நடித்துள்ளனர்.

சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும், நிராகரிப்புகளையும் கடந்து ஒரு பெண் நினைத்தால் சாதிக்க முடியும், எடுத்த காரியத்தில் வெற்றி பெற முடியும் என்று சொல்கிற கதை இது. சின்னச் சின்ன சலனங்களுக்கும் பருவக் கவர்ச்சிகளுக்கும் இடம் தராமல் லட்சியத்தை நோக்கிச் சென்று அடையும் ஒரு பெண்ணின் கதை இது.

கல்லூரி மாணவி, விவசாயம் செய்யும் பெண், ராணுவ வீரர் என்று மூன்று மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார் ஜான்விகா. மேலும் சண்டைக் காட்சிகளிலும் இவரே டூப் இல்லாமல் நடித்துள்ளார். வரும் அக்டோபர் 31ஆம் தேதி படம் வெளிவர உள்ளது.

இந்தப்படம் கல்லூரி மாணவிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. மாணவிகளிடையே ஜான்விகா பேசும் போது, இந்தப் படம் இன்று இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குப் பிடிக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !