என்னது, பாகுபலி பிரபாஸ் வயது 46 ஆ?
'பாகுபலி' பிரபாஸ் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். என்னது, அவர் வயது 46 ஆ என பலரும் வியந்தாலும், அதுதான் உண்மை. இன்னமும் அவருக்கு திருமணம் ஆகவில்லை. எப்போது திருமணம்? அவரும் அனுஷ்காவும் திருமணம் செய்வார்களா? அவங்க இரண்டுபேரும் எப்போது கணவன் மனைவி ஆவார்கள்?. அவர் ஏன் இவ்வளவு வெயிட்டாக இருக்கிறார்? என வழக்கமான கேள்விகள் கேட்கப்பட்டு கொண்டு இருந்தாலும், இந்திய சினிமாவில் பிரபாஸ் செய்த சாதனைகள் பல.
அவரை தெலுங்கில் “ரெபெல் ஸ்டார்” என்று கொண்டாடுகிறார்கள். அவர் கொடுத்து வெற்றிகள் அதிகம். இந்தியளவில் 'பாகுபலி, கல்கி 2998 ஏடி' என்ற இரண்டு ஆயிரம் கோடி வெற்றி படங்களை கொடுத்தவர் அவர். இவரின் 6 படங்கள் 100 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. அதிலும் பாகுபலி இந்தியாவை தாண்டி உலகளவில் வெற்றி பெற்று, அதிகம் வசூலித்த இந்திய படங்களின் வரிசையில் இருக்கிறது. இன்றைக்கும் அவர் படங்களுக்கு தனி மார்க்கெட் இருக்கிறது.
அவர் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திரா, தெலுங்கானாவில் அவர் நடித்த பழைய படங்கள் மீண்டும் திரையிடப்படுகின்றன. குறிப்பாக, 'சலார், ஈஸ்வர், பவுர்ணமி' படங்கள் மட்டுமல்லாமல், 'பாகுபலி: தி எபிக்' (இரு பாகங்களும் சேர்ந்து) அக்டோபர் 31 அன்றும் ரீ ரிலீஸ் ஆகிறது. அடுத்து அவர் நடிப்பில் 'தி ராஜா சாப்' பான் இந்திய படமாக அடுத்த ஆண்டு ஜனவரி 9ல் ரிலீஸ் ஆகிறது.
அதற்கடுத்து, 'சலார்: பாகம் 2, ஸ்பிரிட், கல்கி 2898 ஏடி: பாகம் 2' மற்றும் வரலாற்று டிராமா திரைப்படம் 'பவுஜி' ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. ஆந்திராவில் பிறந்த பிரபாஸ் சிறிது காலம் சென்னையிலும் பள்ளி படிப்பை தொடர்ந்தார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.