இளம் வயது தோற்றத்தில் கிஷோர்
ஹேஷ்டேக் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மெல்லிசை'. கிஷோர் குமார் மற்றும் புதுமுகம் தனன்யா நடிக்கின்றனர். கிஷோருக்கு ஜோடியாக சுபத்ரா ராபர்ட் கதாநாயகியாக நடிக்கிறார். ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், மற்றும் கண்ணன் பாரதி நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கூறும்போது, காதல், லட்சியம், தோல்வி, மீட்பு ஆகிய உணர்வுகளை 'மெல்லிசை' பேசுகிறது. இதனூடாக தந்தை மகளுக்கு இடையிலான உறவையும் பேசுகிறது. அனைத்து தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், 'அன்பு மட்டும் அண்டம் தேடும்' என்ற டேக்லைனையும் கதையையும் கொண்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெற்றிமாறன் வெளியிட்டது எங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வெற்றி மாறன், முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இளைமையாக இருக்கிறார். 'அன்பு மட்டும் அண்டம் தேடும்' என்ற டேக்லைன் படத்தின் கருவை சரியாக பிரதிபலிக்கிறது. 'மெல்லிசை' படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.