திரவுபதி 2: ரிச்சர்ட்சின் 'வீர சிம்ஹா கடவராயன்' தோற்றம் வெளியீடு
ADDED : 5 minutes ago
மோகன்ஜி இயக்கிய திரவுபதி படத்தின் இரண்டாம் பாகம் வரலாற்று கதையாக உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் தயாராகும் இந்தப் படத்தின் கதை தென்னிந்திய வரலாற்று சூழலில் சக்தி, மரபு மற்றும் நீதி பற்றி பேசுகிறது. டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ரிச்சர்ட், வீரசிம்ஹா கடவராயன் என்ற அரசன் கேரக்டரில் நடிக்கிறார். அந்த தோற்றம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நேதாஜி புரொடக்ஷன்ஸ், சோழ சக்ரவர்த்தி மற்றும் ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. ரக்ஷனா இந்துசுதன், நட்டி நடராஜ், ஒய்.ஜி. மகேந்திரன், சரவண சுப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார், பிலிம் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.