உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கதை நாயகியான கீதா கைலாசம்

கதை நாயகியான கீதா கைலாசம்


கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம். நாடகத்தில் நடித்த அனுபவம் இருந்த கீதா, கணவரின் மறைவிற்கு பிறகு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். 'கட்டில்' படத்தில் அறிமுகமான இவர் தற்போது அம்மா கேரக்டர்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த 'இட்லிகடை' படத்தில்கூட அவரது நடிப்பு பேசப்பட்டது.

இந்த நிலையில் அவர் 'அங்கம்மாள்' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இது எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய 'கோடித்துணி' என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. விபின் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ளார். கார்த்திகேயன், பெரோஜ்கான், அன்சய் சாமுவேல் இணைந்து தயாரித்துள்ளனர். அன்சய் சாமுவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார், முகமட் மக்பூல் மன்சூர் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தில் சரண், பரணி, தென்றல் ரகுநாதன், முல்லை அரசி, பேபி யாஸ்மின் மற்றும் பலர் நடித்துள்ளனர். மும்பை திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இந்த படம் விரைவில் தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது. ஸ்டோன் பென்ச் நிறுவனம் வெளியிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !