கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!!
ADDED : 4 minutes ago
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த படம் 'டியூட்'. சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கிறது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். தீபாவளி படங்களில் வசூலில் முதலிடம் பிடித்துள்ள இந்த படம் திரைக்கு வந்த ஆறு நாட்களில் 100 கோடி வசூலித்து இருக்கிறது.
இதற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான 'டிராகன்' 150 கோடி வசூலித்த நிலையில், 'டியூட்' அதை விட அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டியூட் பட நாயகியான மமிதா பைஜூ இப்படத்தில் இடம்பெற்ற 'கருத்த மச்சான்' ரீமிக்ஸ் பாடலுக்கு அசத்தலான நடனமாடி ஒரு வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 2கே கிட்ஸ்களை வெகுவாக கவர்ந்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.