முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால்
ஆர்யன் படவிழாவில் பேசிய ஹீரோ விஷ்ணு விஷால் ''இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சவுத்ரி என 2 ஹீரோயின்கள் இருக்கிறார்கள். கதைப்படி முதல் 30 நிமிடம் ஷ்ரத்தா கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும். 2வது ஹீரோயின் மானசா சவுத்ரிக்கும், எனக்கும் ஒரு முத்தக்காட்சி இருந்தது. ஆனால், அது வேண்டாம் என்று அவர் பீல் பண்ணினார். அதனால் படத்தில் இருந்து அதை நீக்கிவிட்டோம். அவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்தோம் என்றார்.
விஷ்ணு விஷாலுக்கும் முத்தக்காட்சிக்கும் செட்டாகவில்லை. தனது தம்பியை வைத்து அவர் தயாரித்து, முக்கிய வேடத்தில் நடித்த ஓஹோ எந்தன் பேபி பட விழாவிலும் முத்தக்காட்சி பற்றி பேசினார். இத்தனை படங்களில் நடித்துவிட்டேன். எனக்கு முத்தக்காட்சி இல்லை. ஆனால், தம்பிக்கு முதல் படத்திலேயே இருக்கிறது என்று பேசினார். இந்த படத்தில் அது இருந்தது. ஆனால், படத்தில் இல்லை. அடுத்த படத்திலாவது அவர் ஆசையை இயக்குனர்கள் நிறைவேற்ற வேண்டும் என்றார்கள்.