ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி
ADDED : 1 hours ago
தெலுங்கு திரையுகின் முன்னணி நடிகரான ராம்சரண், அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த உபாசனா காமினேனியை கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளுக்கு பின் 2023ல் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கிளின் காரா என பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் உபாசனா கர்ப்பமாகி உள்ளார்.
இந்த முறை இவர்களுக்கு டபுள் ஜாக்பாட் ஆக இரட்டைக் குழந்தைகள் பிறக்க இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் உபாசனாவிற்கு கர்ப்பகாலத்தில் நடக்கும் விசேஷம் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்குபெற நடைபெற்றது. இது குறித்த வீடியோ, புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள உபாசனா, “புதிய ஆரம்பங்கள்” என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.