உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிமுகவுக்கு தலைமை ஏற்க நினைத்தேனா? இயக்குனர் கே .பாக்யராஜ் விளக்கம்

அதிமுகவுக்கு தலைமை ஏற்க நினைத்தேனா? இயக்குனர் கே .பாக்யராஜ் விளக்கம்


சென்னையில் நடந்த 'ஆறு அறிவு' படவிழாவில் பேசியவர்கள், ஒரு காலத்தில் அதிமுகவுக்கு தலைமை ஏற்று நடத்துகிற வாய்ப்பு கே.பாக்யராஜ்க்கு வந்தது என்ற ரீதியில் பேசினார்கள. அதற்கு மேடையிலே அவர் விளக்கம் அளித்தார்.

''எம்ஜிஆர் மறைந்தவுடன் ஆர்எம்வி தலைமையில் கட்சி தொடர்ந்து நடக்க வேண்டும் என்று சில மூத்த த லைவர்கள் என்னிடம் வந்து பேசினார்கள். அதற்கு நீங்க குரல் கொடுக்க வேண்டும் என்றார்கள். இப்போதுதான் எம்ஜிஆர் மறைந்து இருக்கிறார். சில நாட்களில் இப்படி பேசுவது சரியல்லை என்றேன். அடுத்து சிலர் வந்து ஜெயலலிதா கட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று நீங்க பேச வேண்டும் என்கிறார்கள். அவர்களிடமும் அதே பதிலை சொன்னேன்.

மேலும் இப்போதைய நிலையில் எம்ஜிஆர் மனைவி ஜானகி தலைமை ஏற்கட்டும். பின்னர் பொதுக்குழுவில் யாருக்கு ஆதரவு இருக்கிறதோ, அவர்கள் வசம் கட்சி போகட்டும் என்றேன். மற்றபடி நான் அதிமுகவை நடத்த நினைக்கவில்லை.
சட்டசபை தேர்தல் வரும் நேரத்தில் தவறான கருத்துகள் பரவ வேண்டாம்'' என்றார் பாக்யராஜ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !