வாசகர்கள் கருத்துகள் (1)
அப்போ தனுஷ் விரைவில் தாத்தா ஆகப்போகின்றாரா
நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ். இவர் தனுஷ் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர், தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் ஹீரோ ஆனார். அந்த படம் ஓரளவு பேசப்பட்ட நிலையில், அடுத்த படம் குறித்து அறிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில் பவிஷ் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்கவிழா சென்னையில் இன்று நடந்துள்ளது. பவிஷ் தாத்தாவும், பிரபல இயக்குனருமான கஸ்தூரிராஜா படப்பிடிப்பை தொடங்கி வைத்துள்ளார். பவிஷ் மாமாவும், இயக்குனருமான செல்வராகவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆந்திராவை சேர்ந்த யூடியூப் பிரபலம் நாகதுர்கா ஹீரோயின், புதுமுகம் மகேஷ் ராஜேந்திரன் படத்தை இயக்குகிறார். அவர் கூறுகையில், ''இந்த படம் இளம் தலைமுறை (Gen Z) ரசிகர்களும், குடும்பங்களும் ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மரபும் நவீனமும் கலந்த, ஆச்சரியம் மற்றும் கவிதை நிறைந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. 2026 கோடை வெளியீடாக இப்படம் இருக்கும்'' என்கிறார் இயக்குனர்.
அப்போ தனுஷ் விரைவில் தாத்தா ஆகப்போகின்றாரா