உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித்

கோயிலில் 'தல…தல' என்ற ரசிகர்கள்: 'வேண்டாம்' என சைகை செய்த அஜித்


இன்றைய சினிமா உலகில் தான் போகும் இடமெல்லாம் ரசிகர்கள் சூழ்ந்திருக்க வேண்டுமென சில நடிகர்கள் என்னென்னமோ செய்கிறார்கள். இசை வெளியீடு விழாக்கள் நடந்தால் அரசியல் கட்சிகள் போல பணம் கொடுத்து கூட ஆட்களைக் கூட்டி வந்து கத்த வைக்கிறார்கள். அப்படியானவர்களுக்கு மத்தியில் மாறுபட்ட நடிகராக இருப்பவர் அஜித். அதற்காகவே பல வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றங்களை துணிச்சலாகக் கலைத்தவர்.

திருப்பதியில் இன்று அதிகாலை சுப்ரபாத தரிசனம் செய்தார் அஜித். அவர் வந்த போது அருகில் வரிசையில் நின்றிருந்த சிலர் 'தல தல' என்று கூச்சலிட்டார்கள். ஆனால், அப்படி செய்யக் கூடாது, இது கோயில் என்று சைகை செய்து அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார். அதேபோல், காது கேளாத நபர் ஒருவர் செல்பி கேட்க, அவரின் போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார் அஜித். அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கடந்த வாரம் பாலக்காடு அருகே தனது குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வந்தார் அஜித். அடுத்து திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அஜித்தின் இந்த பக்தி வழிபாடு சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !