வாசகர்கள் கருத்துகள் (1)
Admin plz correct Not a Acotober 1 .
தியேட்டர் வெளியீடுகளைத்தான் ரசிகர்கள் கொண்டாட வேண்டுமா, ஓடிடி வெளியீடுகளையும் கொண்டாடும் வாரமாக இந்த வாரம் அமைய உள்ளது. இந்த வாரத்தில் மூன்று மொழிகளில் மூன்று முக்கிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன.
தமிழில் தனுஷ் இயக்கம் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளியான 'இட்லி கடை' படம் நாளை அக்டோபர் 29ம் தேதி ஓடிடி தளத்தில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தியேட்டர்களில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறாத இப்படம் ஓடிடி தளத்தில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகி 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்த படம் 'லோகா சாப்டர் 1'. கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் நடிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு என்பதால் ஹிந்தியிலும் சேர்த்தே வெளியிடுகிறார்கள். மற்றும் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தைப் பார்க்கலாம்.
அக்டோபர் 2ம் தேதி வெளியாகி இந்த வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் புரிந்த 'காந்தாரா சாப்டர் 1' கன்னடப் படம் அக்டோபர் 1ம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஹிந்தியில் எட்டு வாரங்களுக்குப் பிறகே வெளியாகும்.
இந்தப் படங்கள் மட்டுமல்லாது மேலும் சில படங்களும் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. அதனால், இந்த வாரம் ஓடிடி தளங்களில் படங்களைப் பார்ப்பவர்களுக்கு வார இறுதி விடுமுறை நாள் சரியாக பொழுதுபோய்விடும்.
Admin plz correct Not a Acotober 1 .