பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம்
ADDED : 35 minutes ago
வரும் 2026 பொங்கலுக்கு விஜய் நடித்த ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகிய படங்கள் வருவது உறுதியாகி உள்ளது. சூர்யாவின் கருப்பு வருமா? வராதா என்ற தெளிவில்லாமல் இருக்கிறது. இதற்கிடையில், இன்னொரு படமாக ‛தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு' என்ற படமும் வெளியாக உள்ளது.
சமீர் அலிகான், மான்சி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர், இதில் நடித்துள்ளனர். ஹீரோவே படத்தை இயக்கி உள்ளார். இரண்டு வெவ்வேறு பின்னணியை சேர்ந்த ஹீரோ, ஹீரோயின் காதலிக்கிறார்கள். அவர்களுக்கு என்னென்ன தடைகள் வருகிறது என்பதை ஜாலியாக சொல்லியிருக்கிறோம்.
சென்னை, புதுச்சேரி, கோவையில் படப்பிடிப்பு நடந்துள்ளது என்கிறார்கள் படக்குழுவினர். கருப்பு வராவிட்டால் இன்னும் சில படங்களும் பொங்கல் ரேசில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.