கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய 'கேஜிஎப்' படத்தில் இரண்டு பாகங்கள் மற்றும் 'சலார்' படத்தின் முதல் பாகம் ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ரூபன் கவுடா. இந்த படங்களின் வெற்றிக்கு இயக்குனர் பிரசாந்த் நீலுடன் உறுதுணையாக இருந்த இவர், அடுத்ததாக ஜூனியர் என்டிஆரை வைத்து பிரசாந்த் நீல் இயக்கும் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்த நிலையில் புவன் கவுடாவுக்கும் நிகிதா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது மனைவி லிகிதாவுடன் கலந்து கொண்டார். ஆச்சரியமாக இந்த திருமண நிகழ்வில் நடிகை ஸ்ரீ லீலாவும் கலந்துகொண்டு தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒளிப்பதிவாளர் புவன் கவுடா தெலுங்கில் சலார் என்கிற ஒரு படத்தில் மட்டுமே பணியாற்றிய நிலையில் அந்தப்படத்திலும் ஸ்ரீ லீலா நடித்திராத நிலையில் அவரது இந்த திருமணத்தில் அவர் கலந்து கொண்டிருப்பதால் பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆர் இணையும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாரோ என்கிற யூகமும் தற்போது கிளம்பியுள்ளது. அதேசமயம் இந்த படத்தில் ருக்மணி வசந்த் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.