உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு

பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு


தீபாவளிக்கு வந்த படங்களில் பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டியூட்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு சேர்ந்து அந்த படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை அள்ளியுள்ளது. ஆனாலும் படத்தின் கருவுக்கு, சில காட்சிகளுக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதெல்லாம் சமூக சீர்கெடு, இப்படிப்பட்ட கதைகளை உற்சாகப்படுத்தக்கூடாது என்கிறார்கள். திரைத்துறையிலும் இப்படிப்பட்ட குரல்கள் கேட்கின்றன.

இந்நிலையில், சென்னையில் நடந்த ஒரு விழாவில் டியூட் குறித்து மறைமுகமாக, கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் இயக்குனர் பேரரசு. அவர் கூறுகையில் ''சினிமாவில் எந்த கதையும் எடுக்கலாம். காதல், காமெடி, ஆக்ஷன், எமோஷன், திரில்லர், பேய், ஜாதி படம் எடுக்கலாம். அதன் நோக்கம் நல்லதாக இருக்கனும். நல்ல கருத்தை சொல்லணும். மக்களை சீரழிக்கிற மாதிரி படம் எடுக்ககூடாது. ஒற்றுமையை உருவாக்க படம் எடுப்பது கலைச்சேவை. வன்முறை, காழ்ப்புணர்ச்சி, பிரிவினையை உருவாக்கினால் அது கலைக்கு செய்கிற துரோகம். குறிப்பாக, கலாச்சார சீரழிவு படங்களை எடுப்பது தவறு. அந்த வகை படங்களை விட ஆபாச படம் எவ்வளவோ மேல். அதுக்கு ஏ சான்றிதழ் கொடுப்பார்கள். அதுக்கு வேறுவகை ஆடியன்ஸ். கலாச்சார சீரழிவு படம் எடுத்து மக்களை கெடுக்காதீர்கள். பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்கிறது'' என்று பொங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !