உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார்

அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார்

பாடகர், நடிகரான பூவையார் 'ராம் அப்துல்லா ஆண்டனி' என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். நாளை படம் ரிலீஸ். ஜெயவேல் இயக்கி இருக்கிறார். 3 மதத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் இருந்து ஒரு சிறுவனை ஏன் கொலை செய்கிறார்கள். அவர்கள் போலீஸ் பிடியில் சிக்கினார்களா என்பது கதை.

இந்த படம் குறித்து பேசியுள்ள பூவையார், ''நான் கதை நாயனாக நடித்த படம் பல தடைகளை தாண்டி வருவது மகிழ்ச்சி. இதில் பள்ளி மாணவனாக நடித்து இருந்தாலும், கதை ஒரு முக்கியமான கருத்தை பேசுகிறது. அதாவது, புகையிலை பொருட்களை பயன்படுத்தக்கூடாது. பீடி, சிகரெட் கூடவே கூடாது. அதனால், பாதிப்பு அதிகம் என்ற நல்ல விஷயத்தை சொல்கிறது. தனிப்பட்ட முறையிலும் இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

நான் நடிக்கும் எந்த படத்திலும் தம் அடிக்கிற காட்சியில் நடிக்க மாட்டேன். காரணம், என் தந்தை இந்த பழக்கத்தால்தான் உயிர் இழந்தார். அதன் பாதிப்பு, வலி, வேதனை எனக்கு நன்கு தெரியும். ஆகவே, அப்படி நடிக்க மாட்டேன். மற்ற பெரிய நடிகர்கள் தம் அடிக்கிற காட்சியில் நடிப்பது குறித்து கருத்து சொல்ல முடியாது. நான் அந்தளவு வளரவில்லை. அடுத்தும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறேன். மார்ஷல் படத்தில் கார்த்தி உடன் இணைந்து நடிக்கிறேன். விஜய் அண்ணா நேரம் கொடுத்தால், நான் நடித்த இந்த படத்தை போட்டுக் காண்பிப்போம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !