ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1'
இந்திய சினிமாவில் சில பான் இந்தியா படங்கள் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகும் போது ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன. ஆனால், தியேட்டர்களிலேயே ஒரு படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவது நாளை நடக்க உள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பல் உருவான 'காந்தாரா சாப்டர் 1' படம் அப்படி ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு நாளை உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர்களின் குடும்பங்களில் உள்ள சிலருக்கு ஆங்கிலம் மட்டுமே நன்றாகத் தெரியும். அவர்களது இந்திய மொழிகளை அவர்களது குடும்பத்தின் வாரிசுகள் பலரும் பேசுவதில்லை. அவர்களுக்கு நம் கலாச்சாரம், பண்பாடு, இந்து மதம் குறித்த வரலாற்றை இப்படி ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளியிடுவதன் மூலம் புரிந்து கொள்ள வைக்க முடியும்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் இதன் மூலம் அடுத்து வெளியாக உள்ள பான் இந்தியா படங்கள் ஆங்கிலத்தில் டப்பிங் செய்து வெளியிடுவதைத் தொடர்வார்கள்.