மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம்
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த பிறகு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதில் தவிர்த்து வந்தார். சமீபத்தில் சிம்பு 49வது படத்தில் சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தார். ஒரு சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 'ஜெயிலர் 2' . இந்த படத்தில் ஏற்கனவே பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர். இப்போது சில காட்சிகளில் ரஜினியுடன் ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் இணைந்து பயணிப்பது போன்று கதை உள்ளதாம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சந்தானம் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் அடுத்த மாதத்தில் படமாக்கபடும் என திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து 'எந்திரன், குசேலன், லிங்கா' ஆகிய படங்களில் சந்தானம் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.