உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன்

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன்

தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன். தற்போது கார்த்தியுடன் சர்தார் 2 படத்தில் நடிப்பவர், தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக தி ராஜா சாப் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் கமிட்டாகி இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது. ஆனால் அந்த செய்தியை அவர் மறுத்துள்ளார்.

அதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், பாபி இயக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 158வது படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதாக இணையத்தில் நிறைய செய்திகள் பரவி வருகின்றன. எனது தொழில் வாழ்க்கையில் பிரபல நடிகர் சிரஞ்சீவி சாருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் நான் இல்லை என்பதையும், வெளியான அந்த செய்தி தவறானது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் மாளவிகா மோகனன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !