ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு?
ADDED : 12 hours ago
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா இணைந்து நடித்துள்ள படம் கருப்பு. இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஜி வேலைகள் முடிவடையவில்லை என்று தாமதம் செய்யப்பட்டது. அதோடு தீபாவளிக்கு கருப்பு படத்தின் காட் மோட் என்ற பாடலை வெளியிட்டார்கள். சாய் அபயங்கர் இசையில் உருவான இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் கருப்பு படம் ஒரு பெரிய நாளில் வெளியாகும் என்று சமீபத்தில் இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கூறியிருந்தார். அதையடுத்து பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டில் வெளியாகலாம் என்று செய்திகள் வெளியாகின. இப்போது பொங்கல் படங்கள் வெளியாகி ஒரு வாரத்துக்கு பிறகு அதாவது குடியரசு தினத்தையொட்டி ஜனவரி 23ம் தேதி அப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.