உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆண்களை கேள்வி கேட்கும் படம்

ஆண்களை கேள்வி கேட்கும் படம்

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் பேக்டரி சார்பில் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரித்துள்ள படம் 'கிறிஸ்டினா கதிர்வேலன்'. எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கி உள்ளார். கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், 'சில்மிஷம்' சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த படம் வருகிற 7ம் தேதி வெளியாகிறது.

படத்தின் அறிமுக நிகழ்வில் நாயகி பிரதீபா பேசுகையில், '' கிறிஸ்டினா கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி. கிராமிய பின்னணியிலான கல்லூரி காதல் கதையாக உருவாகி இருக்கிறது.

இந்தப் படம் 'பருத்திவீரன்', 'மைனா' படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை போல் ரசிகர்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். படத்தில் இயக்குநர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது இந்த படம் பார்க்கிற அனைத்து ஆண்களுக்கும் ஒரு கேள்வியாக அந்தக் கருத்து தோன்றும். அதற்குரிய விடை என்ன என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !