உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ்

இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ்

‛ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழ், தெலுங்கில் மளமளவென படங்களில் நடித்து வந்தார். தற்போது சினிமாவை விட்டே ஒதுங்கி துபாயில் செட்டிலாகிவிட்டார். அதேசமயம் கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் துபாய் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்வதாக அறிவித்தார். அவ்வப்போது வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் இவர், இப்போது ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில், ‛‛அபத்தமான ஏஐ வீடியோக்களை உண்மையானவையாக காட்டும் இந்தப்போக்கு மிகவும் மோசமானது. இப்போது அவை முற்றிலும் பிரித்தறிய முடியாததாக மாறும்போது அது எவ்வளவு மோசமாகிவிடும் என்று கற்பனை செய்து பாருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !