உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா
லவ் ஸ்டோரீஸ் 2 வில் இணைந்து பணியாற்றியபோது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் நட்பாகி காதல் செய்ய தொடங்கினார் தமன்னா. அதன் பிறகு பாலிவுட்டில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டார்கள். அதோடு 2025ம் ஆண்டில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. திடீரென்று காதலர் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்துவிட்டார் தமன்னா. என்றாலும் காதலரை பிரிந்ததற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வரும் தமன்னா, ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடத்தில் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்தது ஏன்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, யாராக இருந்தாலும் உறவுகளிடம் பொய் பேசினால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. பொய் பேசும் நபர்களை நான் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டேன் என்று பதில் கொடுத்து இருக்கிறார் தமன்னா.