உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி

15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி

தமிழில் 1991ல் வெளியான ஈரமான ரோஜாவே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. மிக குறைந்த வயதில் அதாவது 14 வயதில் கதாநாயகியாக அறிமுகமானவர் என அப்போது பரபரப்பாக பேசப்பட்டார். அதைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்தார். குறிப்பாக மலையாளத்தில் அதிக படங்களில் நடித்த இவர் அங்கே தான் தனக்கு சொந்த ஊர் என்பது போல உணர முடிந்தது என்று அவ்வப்போது கூறுவார். திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு கொஞ்சம் ஒதுங்கி இருந்த அவர் பின்னர் தனது கணவரின் தூண்டுதலால் ஒரு சில படங்கள் நடித்தார்.

அப்படி கடைசியாக மலையாளத்தில் சுரேஷ் கோபி நடித்த கலெக்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகினி. அதன்பிறகு தற்போது 15 வருடம் கழித்து மலையாளத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் மோகினி. இயக்குனர் ஜினு ஆபிரகாம் இயக்கத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் மோகினி. வரும் ஜனவரி மாதத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக நடிகை மோகினி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !