கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!
ADDED : 12 hours ago
நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது என்பதை அவர்களே உறுதி செய்தனர்.
இதற்கிடையில் ரஜினி குறுகிய கால கட்டத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். இதற்கான கதை விவாத பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கின்றனர் என்பது உறுதியானது. இவருடன் இணைந்து இந்த படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஐஸ்வர்யா ரஜினி, ஸ்ருதிஹாசன் இருவரும் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தை அதிகாரப்பூர்வமாக வருகின்ற நவம்பர் 7ம் தேதியன்று கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவித்து ரஜினி ரசிகர்களை சந்தோஷப்படுத்த திட்டமிட்டுள்ளனர் என்கிறார்கள்.