வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்!
ADDED : 16 hours ago
தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் ‛வாரிசு, மகரிஷி' போன்ற படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ஹிந்தி நடிகர் அமீர்கான் நடிக்கவிருந்த படம் தற்போது ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டுள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதையடுத்து அமீர்கானுக்கு கூறிய அதே கதையில் தெலுங்கு நடிகர் மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாணை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தையை தில் ராஜூ முன் எடுத்துள்ளார் என கூறப்பட்டது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்சி, தில் ராஜூ இருவரும் மும்பையில் நடிகர் சல்மான் கானுடன் இந்த கதை குறித்து பேசியுள்ளனர். இந்த கதை பிடித்து போக சல்மான் கான் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என பாலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.