உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது!

'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது!


உப்பேனா பட இயக்குனர் புஞ்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் அவரது 16வது படமாக 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கின்றார். சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. ஏற்கனவே இந்த படத்திலிருந்து முக்கியமான கதாபாத்திரங்களின் முதல் பார்வை வெளியிட்டுள்ளனர். இன்று இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஜான்வி கபூர் 'அச்சியம்மாள்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !