சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா!
ADDED : 2 days ago
தமிழ் சினிமாவில் 'சத்யா', 'அண்ணாமலை', 'பாட்ஷா', 'ஆளவந்தான்' என காலத்தால் அழியாத படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இந்த நிலையில், சத்ய சாய் பாபா மீது மக்களிடையே பெரும் பக்தி உள்ளது. இப்போது சுரேஷ் கிருஷ்ணா, சத்ய சாய் பாபா பற்றி 'அனந்தா' என்கிற பக்தி படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தினை தலைப்பு போஸ்டருடன் அறிவித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.