கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது!
ADDED : 8 hours ago
‛கோச்சடையான்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சூரிய பிரதாப் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ரூட்'. இத்திரைப்படம் சயின்ஸ் பிக்சன் ஜானரில் க்ரைம் த்ரில்லர் கதை களத்தை கலந்து உருவாகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக கவுதம் ராம் கார்த்திக் நடிக்கின்றார். மேலும், இதில் அவர் போலீஸ் அதிகாரி தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அபர்சக்தி குரானா நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதில் கதாநாயகியாக பவ்யா தரிகா நடிக்கிறார். இந்த படத்தை வேரூஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக பல கட்டமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது என படக்குழு அறிவித்துள்ளனர்.