உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை

தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை


கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழில் தனுஷ் இயக்கி, நடித்து வெளியான படம் 'இட்லி கடை'. இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் ஆக கிரண் கவுசிக் என்பவர் பணியாற்றினார். அவரின் ஒளிப்பதிவுக்கு பாராட்டையும் பெற்றார். இவர் ஏற்கனவே ‛மைக்கேல், பேபி ஜான்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற தாதா சாகெப் பால்கே இண்டர்நேஷனல் திரைப்பட விழாவில் ஹிந்தி படமான பேபி ஜான் படத்தின் ஒளிப்பதிவிற்காக கிரண் கவுசிக் அவர்களுக்கு 2025ம் ஆண்டிற்கான சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !