உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல்

‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல்


நலன் குமார்சாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛வா வாத்தியார்'. கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு வா வாத்தியார் என ஏன் டைட்டில் வைக்கப்பட்டது என்கிற ஒரு சுவாரசிய தகவலை நடிகர் ஆனந்தராஜ் பகிர்ந்து கொண்டுள்ளார். மெட்ராஸ் மாபியா கம்பெனி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஆனந்தராஜ் அந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவில் சமீபத்தில் பேசும்போது படத்தின் தயாரிப்பாளர் அண்ணாதுரை குறித்து பேசினார்.

அதாவது, “முன்னாள் முதல்வர் அண்ணாதுரை இறந்த தினத்தன்று பிறந்ததால் தான் இவருக்கு அண்ணாதுரை என்று பெயர் வைத்துள்ளார்கள். இதே போல தான் தற்போது நான் நடித்து வரும் வா வாத்தியார் படத்தில் கூட படத்தில் நாயகன் கார்த்தி, எம்ஜிஆர் மறைந்த சமயத்தில் பிறந்தவர். அதனை மையப்படுத்தி தான் அந்த கதையை உருவாக்கி இருக்கிறார்கள்” என்கிற தகவலை கூறினார்.

பொதுவாக திரையுலகில் எம்ஜிஆர் தான் வாத்தியார் என்று எல்லோரும் அழைப்பார்கள். ஆனந்தராஜ் சொன்ன தகவலின் படி அதனால் தான் படத்திற்கு வா வாத்தியார் என்று டைட்டில் வைத்துள்ளார்கள் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !