உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்!

நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்!


ரஜினியின் ‛கூலி' படத்தில் வில்லனாக நடித்த நடிகர் நாகார்ஜுனா, தற்போது தெலுங்கு பிக்பாஸ் சீசன்-9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையே அவரது 100வது படத்தின் ஆரம்பகட்ட பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்.கார்த்திக் என்பவர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்குகிறது. நாகார்ஜூனா தயாரித்து நடிக்கும் இந்த அவரது நூறாவது படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று நடிகைகள் நடிக்கிறார்கள்.

அதில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஹிந்தி நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ள நிலையில், மற்ற இரண்டு நடிகைகளில் ஒருவர் அவரது மனைவியாகவும், மற்றொருவர் முக்கிய கதாநாயகியாகவும் நடிக்கிறார். அந்த இரண்டு பேரில் ஒருவராக தற்போது சுஷ்மிதா பட் ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த ‛லவ் மேரேஜ்' என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இன்னொரு நாயகியாக நடிக்க ஒரு பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !